உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே, த.வெ.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த, 2001ம் ஆண்டு, 137 குடும்பங்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா, ரத்து செய்யப்பட்டது.இதைக்கண்டித்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராமு, பொருளாளர் ஜவஹர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ரவி, வரதன், திலீப்குமார், அருண்குமார், ஸ்டாலின், கார்த்திக், சந்துரு, ரமேஷ், சுதாகர், கோவிந்தராஜ், கிேஷார்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி