உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் கனகனந்தல் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்தவழியாக இரண்டு வாலிபர்கள் பைக்கில் அதிவேகமாக வருவதை கண்டனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இருவரும் வடியாங்குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 21; டைல்ஸ் வேலை செய்பவர் என்றும், சந்தப்பேட்டை, கனகனந்தல் சாலையை சேர்ந்த பச்சையப்பன் மகன் பாலாஜி, 25; தச்சு தொழில் செய்பவர் என தெரிந்தது. வெளியூர்களிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருக்கோவிலுாரில் விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. கஞ்சாவுடன் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை