மேலும் செய்திகள்
திருநங்கை தர்ணா விருதையில் பரபரப்பு
28-Oct-2024
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ரயில் பாதையில் இரு ஆண்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜ்ஜீத் மகன் முகமது ரபீக்,50; இவர் கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் செல்வதாக கூறிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 2.00 மணியளவில் உளுந்தூர்பேட்டையிலிருந்து பரிக்கல் செல்லும் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், முகமது ரபிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, நேற்று காலை 7.00 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டை - பரிக்கல் ரயில் பாதையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு காரணமா என விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
28-Oct-2024