உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் திருப்பணி துவக்கம்

உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் திருப்பணி துவக்கம்

திருக்கோவிலுார் ;திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான திருப்பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. முதல் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டது. பழமையான இக்கோவிலின் ராஜகோபுரம், சன்னதியின் நுழைவு வாயிலில், ஏழு நிலைகளுடன், 120 அடி உயரத்துடன் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. அதேபோல் மேற்கு ராஜகோபுரம் கோவிலுக்குப் பின்புறத்தில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. இதுவும் ஏழு நிலைகளுடன் 140 அடி உயரம் கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோபுரத்தின் திருப்பணி துவக்க விழா கோபுர நுழைவு வாயிலில் நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி, திருப்பணியை பந்தக்கால் நட்டு துவக்கி வைத்தார். கோவில் ஏஜென்ட் கோலாகளன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை