உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு; சாலையில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுமா?

உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு; சாலையில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுமா?

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே இணைப்பு சாலை பகுதியில் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க மேம்பாலம் அல்லது நிரந்தரமான கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும்.உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் முதல் பாடலுார் வரை நான்குவழி சாலை பணி 2009ம் ஆண்டு முடிவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது.இதில், உளுந்துார்பேட்டை - சேந்தநாடு நெடுஞ்சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பு சாலையின் குறுக்கே வாகனங்கள் கடந்து சென்றபோது விபத்துகள் ஏற்பட்டன.மேலும், டோல்கேட் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை நகர் மேம்பாலம் வழியாக செல்லும் போது மேம்பாலத்தில் அவ்வப்போது விபத்துகள் நடந்தன.விபத்துகளை தடுக்க, இணைப்பு சாலை பகுதியில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குறுக்கே செல்லாதபடி பேரிகார்டு, சிமெண்ட் தடுப்பு கட்டை அமைத்தனர். பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மேம்பாலத்தின் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக உளுந்துார்பேட்டை நகர் பகுதிக்குள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.டோல்கேட் அருகே இணைப்புச் சாலை வழியாக ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மினி டெம்போ ஆகிய வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தியதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.இந்நிலையில், இணைப்பு சாலையின் குறுக்கே உள்ள தடுப்புகளை அகற்றி, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் மீண்டும் விபத்து ஏற்பட துவங்கி உள்ளது.எனவே, இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, இணைப்பு சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்லாத வகையில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்தும் வகையில் கான்கிரீட் கட்டைகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே உள்ள இணைப்பு சாலை அருகே மேம்பாலம் கட்டினால் வாகனங்கள் எளிதாக செல்வதோடு விபத்துகளையும் தவிர்க்கலாம். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.அதுவரை, இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தி, விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை