உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாராஹி அம்மன் திருக்கல்யாணம்

வாராஹி அம்மன் திருக்கல்யாணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடந்த வாராஹி அம்மன் திருக்கல்யாண உற்சவத்தில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அடுத்த நிறைமதி சாலையில் உள்ள உன்மத்த பைரவர் சமேத பஞ்சமுக மஞ்சள் வராஹி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காலை 9:30 மணிக்கு சுவாமிகளுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜைகள் நடத்தினர். மேல தாளங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பும் பெண் வீட்டார் அழைப்பும் நடத்தி, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் வாராஹி அம்மன் மற்றும் உற்சவர் உன்மத்த பைரவர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.பக்தர்கள் மொய் வழங்கல், பால் பழம் வழங்கல், அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வைபவத்திற்குப்பின் சுவாமிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை