மேலும் செய்திகள்
சுவரில் போஸ்டர் ஒட்டிய இருவர் மீது வழக்கு
12-Dec-2024
ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் ஐ.ஜே.கே., பிரமுகரை தாக்கிய, வி.சி., கட்சியினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த பெரியபகண்டையை சேர்ந்தவர் குப்புசாமி மகன் நடராஜன், 33; ஐ.ஜே.கே., பிரமுகர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் பகண்டை கூட்ரோட்டில் நடராஜன் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த வி.சி., ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தனது கட்சியில் இணையுமாறு நடராஜனிடம் தெரிவித்துள்ளார். உடன் அங்கிருந்த வி.சி., நிர்வாகிகள் இருவர், நடராஜன் வந்தால் நமது கட்சிக்கு தான் அசிங்கம் என தெரிவித்துள்ளனர்.இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வி.சி., நிர்வாகிகள் ராமராஜன், முனியப்பிள்ளை ஆகிய இருவரும் நடராஜனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், பகண்டை போலீசார் வழக்கு பதிந்து, வி.சி., நிர்வாகிகள் பெரியபகண்டையை சேர்ந்த ராமராஜன்,36; முனியப்பிள்ளை,32; இருவரையும் கைது செய்தனர்.
12-Dec-2024