வி.சி., மாநாடு: டி.ஐ.ஜி., ஆய்வு
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வி.சி., சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டையில் திருச்சி நெடுஞ்சாலையில் வி.சி., சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு வரும் 2ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.எஸ்.பி., ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.