கால்நடை மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை மருத்துவத்துறை சார்பில் நீலமங்கலம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.நீலமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமையில், மாவட்ட கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குனர் கந்தசாமி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து வாராந்திர கால்நடை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.