மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
31-Dec-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் மணி வரவேற்றார். மாநில உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கழிப்பறை, குடிநீர் மற்றும் இணையதள வசதி ஏற்படுத்துதல், டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் வி.ஏ.ஓ.,க்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்றுதல், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை வி.ஏ.ஓ., எனவும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ.ஓ., என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
31-Dec-2025