உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

உளுந்துார்பேட்டை: அக். 26-: உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பிச்சுக்குட்டி தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, செயலாளர்கள் முகமதுகாசிம், சந்திரசேகர் வரவேற்றனர். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபு, மாவட்ட தலைவர்கள் தேவராசன், அண்ணாமலை, பொருளாளர் ரஜினி, துணைத் தலைவர் ரமேஷ், இணைச் செயலாளர் பார்த்தசாரதி, மாநில மகளிர் அணி சுபாஷினி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் முருகன், பொருளாளர் திருப்பதி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு தேர்தல் பணியின் போது ஓட்டுச்சாவடி படியினை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் 10 ஆண்டுக்கு பதிலாக 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைமை நிலையச் செயலாளர் சேகர், இணை பொதுச் செயலாளர் சுதாகர், பிரசார செயலாளர் முனியன், துணைத் தலைவர்கள் நாராயணன், சுப்ரமணியன், மாவட்ட தகவல் தொடர்பாளர்கள் வசந்தகுமார், முத்துராமன், வட்ட தலைவர் அருணாச்சலம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சிவகுருநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !