உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தடுத்து நிறுத்த கிராம மக்கள் மனு

 டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தடுத்து நிறுத்த கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி: டி.கீரனுாரில் குடியிருப்புகளுக்கு நடுவே கட்டப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி கிராம பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; டி.கீரனுார் ஊராட்சிக்குட்பட்ட புதுமண்டபம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் முறையிட்டோம். பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறுத்தப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி, டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை