தெருக்களில் தேங்கிய மழைநீர் கிராம மக்கள் கடும் அவதி
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தெருக்களில் குளம் போல் தேங்கி நின்ற மழை நீரால் மக்கள் அவதியடைந்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த மேப்புலியூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தெருக்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது.தேங்கிய மழை நீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் தெருக்களில் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.