மேலும் செய்திகள்
சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
25-Oct-2025
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு துவங்கியது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை உள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருந்த நிலையில், அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து அதிகபட்ச அளவாக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வரை தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பருவ மழை குறைந்ததால் நீர் வெளியேற்றமும் கடந்த 1ம் தேதி முதல் நிறுத்தப் பட்டது. தற்போது, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 119 அடி (7,321 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட அணையில், 114.75 அடி (6,389 மில்லியன் கன அடி) இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக திருக்கோவிலுார் ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
25-Oct-2025