உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  முதல்வருக்கு வரவேற்பு எம்.எல்.ஏ., அழைப்பு

 முதல்வருக்கு வரவேற்பு எம்.எல்.ஏ., அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழாவிற்கு 26ம் தேதி வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கூறினார். இதுகுறித்து அவர், கூறியதாவது: கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின், கட்டடத்தை திறந்து வைக்கிறார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கள்ளக்குறிச்சியில் புறவழிச்சாலை பஸ் ஸ்டாண்ட், கள்ளக்குறிச்சி மற்றும் மணலுார்பேட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது. திறப்பு விழா முடிந்ததும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்வர் ஸ்டாலினை வரவேற்க மங்கள இசை, பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன், பூரண கும்ப மரியாதை உட்பட 35 வகையான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அந்தந்த பகுதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை