மேலும் செய்திகள்
மகாராஜபுரத்தில் சேதமடைந்த பூங்கா
10-Nov-2024
திருக்கோவிலுார் அஷ்டலட்சுமி நகரில் திறக்கப்பட்ட உடற் பயிற்சி கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட அஷ்டலட்சுமி நகரில், அமைச்சர் பொன்முடியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. இதனை 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். இதனால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டிக் கிடக்கிறது.உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10-Nov-2024