மேலும் செய்திகள்
மாணவி மாயம் போலீஸ் விசாரணை
25-Oct-2024
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி அருகே மனைவி மாயமான சம்பவத்தில் கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துார் சேர்ந்த மணி மனைவி செல்வசுமித்ரா,21; இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி காலை 10 மணி முதல் செல்வசுமித்ரா காணாமல் போனார். இதனையறிந்த செல்வமித்ராவின் தாத்தா கடலுார் மாவட்டம் வரம்பனுார் சேர்ந்த கண்ணன்62; கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கணவர் மணி, மாமனார் சாமிதுரை, மாமியார் காசியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25-Oct-2024