மேலும் செய்திகள்
மகன் மாயம் : தந்தை புகார்
22-Apr-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, கரியப்பா நகரைச் சேர்ந்தவர் துரைசாமி, 44; இவரது மனைவி வெண்ணிலா, 32; இவர்களுக்கு அகிலா,10; என்ற மகளும், பரமசிவம், 8; என்ற மகனும் உள்ளனர்.கடந்த 24ம் தேதி, வெண்ணிலா, வால்பாறையில் உள்ள அவரது அண்ணன் அற்புதநாதன் வீட்டிற்கு செல்வதாக கூறி 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Apr-2025