வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறந்த கருத்து வன விலங்குகளை பாதுகாப்பது அரசின் கடமை. அது மட்டுமல்ல இந்த புவி உயிர்ப்புடன் இருக்க வனமும் வன விலங்குகளும் அவசியம்....
கள்ளக்குறிச்சி மாவட்டம் மிகப்பெரிய வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இங்கு மான், மயில், பாம்பு, குரங்கு, காட்டுபன்றி உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.தமிழக அரசு வனப்பகுதியில் வியாபார நோக்கத்தில் யூகலிப்ட்ஸ் மரங்களை வளர்க்கிறது. யூகலிப்ட்ஸ் மரங்கள் நன்கு வளர்ந்த பின் அறுவடை செய்து பேப்பர் ஆலைக்கு அனுப்புவதன் மூலம் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கும். வனவிலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியில் இருந்த மரங்களை அழித்து, யூகலிப்ஸ்ட்ஸ் மரங்கள் வளர்க்கப்படுவதால் வன விலங்குகளின் உணவு தேவை கேள்விக்குறியானது. இதனால் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.வனப்பகுதியில் உணவில்லாததால் குரங்குகள் சாலையோரமாக நின்று ஏங்கி தவிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டியவாறு உள்ள விளைநிலங்களில் காட்டுபன்றிகள், மயில்கள், மான்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதில் மான் மற்றும் குரங்குகள் சாலையை கடக்கும் போது, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோதி பரிதாபமாக இறக்கின்றன. மான்கள் விளைநில கிணற்றில் விழுந்து இறக்கின்றன. தேசிய பறவையான மயில்களை சமூக விரோதிகள் சுட்டு, விற்பனை செய்கின்றனர். காட்டுபன்றிகளால் பயிர்கள் சேதமடைவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.வாழ்விடங்களை இழந்த வனவிலங்குகளுக்கு பசியை தீர்த்துக்கொள்ள பயிர்களை மேய்வதை தவிர வேறு வழியில்லை. வேட்டையாடுவதாலும், வாகனங்கள் மோதி இறப்பதாலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. எனவே, வன உயிரின ஆய்வாளர்கள் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும். அழிந்து வரும் விலங்குகளை பாதுகாக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விலங்குகள் சரணாலயம் அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வனவிலங்குகள் பாதுகாப்பாக இருப்பதுடன், மக்கள் பொழுது போக்கு இடமாகவும், அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.
சிறந்த கருத்து வன விலங்குகளை பாதுகாப்பது அரசின் கடமை. அது மட்டுமல்ல இந்த புவி உயிர்ப்புடன் இருக்க வனமும் வன விலங்குகளும் அவசியம்....