உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரைமக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள எம்.ஆர்.என்., நகர் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் பலர் காத்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். அதேபோல் கூலி வேலை செய்து விட்டு செல்லும் கிராமப்புற பெண்கள் உட்பட பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் சேர்கள் உடைந்தும் காணப்படுகிறது. பயணிகள் நிழற்குடையின் தரைதளமும் உடைந்து முற்றிலும் சேதடைந்து காணப்படுகிறது. இதனால், நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெளியே வெயில் காத்திருந்து செல்கின்றனர். எனவே, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை