மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு
14-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மளிகை கடையில் புகையிலை பொருள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருள் விற்பனை செய் யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கண்டாச்சிமங்கலம் சேர்ந்த செல்வம் மனைவி லட்சுமி, 40; மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து வரஞ் சரம் போலீசார் லட்சுமியை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மளிகை கடைக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்த ஜெயராமன் மகன் ராஜா என் பவரை தேடி வருகின்றனர்.
14-Oct-2025