மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
18-Oct-2025
திருக்கோவிலுார்: அத்திப்பாக்கம் வாகன தணிக்கையின் போது ஹான்ஸ் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., மாதவன் உத்தரபின் பேரில், மணலுார்பேட்டை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை - திருக்கோவிலுார் மெயின் ரோட்டில் அத்திப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூருவில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஆர்கவாடியைச் சேர்ந்த குப்புசாமி மனைவி உத்திராம்பாள், 49; என்பவர் கர்நாடகாவில் இருந்து 36 கிலோ ஹான்ஸ் பொட்டலங்களை பஸ்சில் கடத்தி வருவது தெரியவந்தது. இது குறித்து மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து உத்திராம்பாளை கைது செய்தனர்.
18-Oct-2025