உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டாடா ஏஸ் வாகனம் மோதி பெண் பலி

டாடா ஏஸ் வாகனம் மோதி பெண் பலி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மனைவி பாப்பாத்தி, 58; இவர் நேற்று காலை 6:30 மணிக்கு, பழைய மாரியம்மன் கோவில் தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு டாடா ஏஸ் பால் வண்டியை, ஓட்டுநர் பின்புறமாக இயக்கிய போது, பாப்பாத்தி மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவரை குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய டாடாஏஸ் டிரைவர் விளாந்தாங்கல் சாலையை சேர்ந்த வேலு மகன் நிஷாந்த்,29; மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ