உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி

 பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த செரத்தனுார் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் வெங்கடேசன், 36; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 14ம் தேதி அவரது மகன் விசான், 6; அதே பகுதி அந்தோணிராஜ் மனைவி ராதிகா, 20; ஆகியோருடன் பைக்கில் சென்றார். பைக் மேட்டாத்துார் அருகே சென்ற போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த விசான், ராதிகா ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ராதிகா நேற்று இறந்தார். விசான் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்