உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

சங்கராபுரம்; பூட்டை கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 10வது வார்டில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை 7 மணிக்கு காலி குடங்களுடன் பூட்டை பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சப்இன்ஸ்பெக்டர் பிரபு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சங்கராபுரம் - பூட்டை மார்க்கத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி