உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலி

உளுந்துார்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலி

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஸ்கூட்டியில் சென்ற கூலி தொழிலாளி மீது கார் மோதியதில் இறந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராமன், 49; இவர் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பள்ளம் தோண்டும் கூலி வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு குடும்பத்தினரை பஸ்சில் அனுப்பி வைத்தார். பின்னர் இவர் ஸ்கூட்டியில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.நேற்று மதியம் 1.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை அடுத்த எம்.எஸ். தகாகா அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் சமேதன் 30. ஓட்டி சென்ற கார், ஸ்கூட்டி மீது மோதியது.அப்போது பின் தொடர்ந்து வந்த சென்னை ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் 43, ஓட்டிச் சென்ற மற்றொரு கார் ராமன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பலத்த அடிபட்டு இறந்தார். உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி