உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் நடந்த உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் பேரணியை துவக்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது. பேரணியில் பங்கேற்றோர் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதின் அவசியம் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மாவட்ட திட்ட அலுவலர் அருணா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.