மடிக்கணினி பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி: முதுகலை பட்டம், முனைவர் பட்டம் படிக்கும் பார்வையற்றவர்கள் இலவச மடிக்கணினி பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;தமிழக அரசு சார்பில் முதுகலை பட்டப்படிப்பு, முனைவர் பட்டம் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி தரம் மேம்பட உதவியாக இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள், தங்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை எண், சதவீதம், பாடப்பிரிவு பெயர், கல்வி பயிலும் ஆண்டு, கல்லுாரியின் பெயர் மற்றும் முகவரி, கல்வியாண்டு, பயனாளியின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை, பயனாளியின் 'போனபைட்' சான்றிதழுடன் பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.