உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில், சாதிப் பாகுப்பாடற்ற சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் கிராமங்களை தேர்ந்தெடுத்து, தகுதி வாய்ந்த 10 ஊராட்சிகளுக்கு, தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது வழங்கப்படவுள்ளது. அதன்படி 2025ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது, சுதந்திர தினம் (ஆக.,15) வழங்கப்படுகிறது. இதனையொட்டி ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்ப படிவத்துடன், அதற்குரிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களையும் இணைத்து, வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தினை https://tinyurl.com/Panchayataward என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை