மேலும் செய்திகள்
லாரியில் பைக் மோதி தச்சு தொழிலாளி பலி
08-Sep-2025
சின்னசேலம், ; சின்னசேலம் அடுத்த தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகள் ரோஷினி, 20; இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு மொபட்டில் தனது தாய் சுகந்தியுடன், வி.கூட்ரோடு - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். மொபட்டை சுகந்தி ஒட்டினார். காலசமுத்திரம் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே புவனகிரி வானக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் ஓட்டி வந்த பைக் சுகந்தி மொபட் மீது மோதியது. இதில் தாய், மகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஷினி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின்பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Sep-2025