உள்ளூர் செய்திகள்

இளம் பெண் மாயம்

தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலு, 49; விவசாயி. இவரது மகள் நிஷா, 22; ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கடந்த மாதம் 27ம் தேதி நிஷா தனது வீட்டிற்கு வந்தவரை அன்று முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.வேலு கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !