உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டில் அதிகரிக்கும் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்

மூங்கில்துறைப்பட்டில் அதிகரிக்கும் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் மற்றும் சாலையில் பைக்கில் சாகசம் செய்யும் செயலும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.கஞ்சா போதையில் மின் மோட்டார் கேபிள் திருடுவது, குடிநீர் டேங்க் மோட்டார் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சாலையில் செல்பவர்களை அதிச்சியடையச் செய்யும்படி பைக்கில் ரேஸ் ஓட்டி சாகசம் செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கஞ்சா போதையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.மேல்சிறுவலுார் கூட்ரோடு, அருளம்பாடி, வடப்பொன்பரப்பி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனையாகிறது. மாவட்ட காவல்துறை கண்காணித்து கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ