பைக் திருட முயற்சி வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நகரை சேர்ந்தவர் பெரியசாமி, 57; எலக்ட்ரிஷியன். இவர் கடந்த 10ம் தேதி இரவு வீட்டிற்கு முன் தனது பைக்கினை நிறுத்தினார். மறுநாள் காலை 3:00 மணிக்கு, மர்மநபர் ஒருவர் பைக்கினை திருட முயற்சித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடித்து பெரிய சாமியிடம் தெரிவித்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்ம நபரிடம் விசாரித்தனர். பிடிப்பட்ட நபர் பொரசக்குறிச்சியை சேர்ந்த முத்துசாமி மகன் வீரமுத்து, 31; என்பது தெரிந்தது. பைக் திருட்டில் ஈடுபட முயன்ற வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர்.