உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அலுமினிய கேன்கள் திருடிய வாலிபர் கைது

அலுமினிய கேன்கள் திருடிய வாலிபர் கைது

சின்னசேலம்: குரால் கிராமத்தில் அலுமினிய கேன்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த குரால் காட்டுகொட்டாய் பகுதியில் தனியார் பால் சேகரிப்பு மையம் இயங்கி வருகிறது. நேற்று பிற்பகல் 2:00 மணி அளவில் பால் சொசைட்டியின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு அலுமினிய பால் கேன்களை வாலிபர் ஒருவர் ஆம்னி காரில் திருடிச் செல்ல முயன்றார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து கீழ்க்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ராயப்பனுாரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் புகழேந்தி, 22; என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து பால் கேன்கள் மற்றும் ஆம்னி காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிந்து புகழேந்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை