உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சின்னசேலம் : தொட்டியம் கிராமத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜதுரை, 29; திருமணம் ஆகாத விரத்தியில் இருந்த ராஜதுரை கடந்த 6ம் தேதி வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜதுரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி