உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி

சின்னசேலம்: செம்பாகுறிச்சி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.கடலுார் மாவட்டம், மங்களூர் அடுத்த கச்சிமைலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் தேவா, 26; இன்ஜினியரிங் முடித்து விட்டு சிங்கப்பூரில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஒரு மாதம் முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் நைனார்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனது பைக்கில் சொந்த ஊர் திரும்பினார்.விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பாக்குறிச்சி மான்குட்டை பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி தேவா மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த தேவா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி