உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி

தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே செண்டர் மீடியா தடுப்புக்கட்டை மீது பைக் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். உளுந்தூர்பேட்டை தாலுகா பாதுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கோகுல், 21; இவர் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த கோகுல், உறவினரான முத்துவேல் மகன் ரோகித்தை, 17; வீட்டில் இருந்து செங்குறிச்சி டோல்கேட் நோக்கி பைக்கில் உட்கார வைத்து ஓட்டி சென்றார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் செங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செண்டர் மீடியா தடுப்புக்கட்டை மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் இறந்தார். ரோகித் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை