மேலும் செய்திகள்
கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்
30-Apr-2025
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பார்த்திபன், 25; தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன், மன்மலையிலிருந்து மாத்துார் நோக்கி பைக்கில் சென்றார். மாத்தூர் தொம்ப பாலம் அருகே சென்றபோது எதிரே கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்த பைக், பார்த்திபன் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்த்திபனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Apr-2025