உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்

அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்

சின்னசேலம்; சின்னசேலத்தில் அரசு பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் ரத்தினகுமார், 37; இவர் நேற்று முன்தினம் பகல் 3 மணி அளவில் கள்ளக்குறிச்சி சின்னசேலம் சாலையில் தனது பைக்கில் சென்றுள்ளார்.அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே நாமக்கல் மாவட்டம், ஒட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ் ரத்தினகுமார் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த ரத்தினகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ