| ADDED : ஜூலை 11, 2024 12:16 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவத்தின்போது, கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இதேபோல், ஆனி, ஆடி மாதங்களில், வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதன்படி ஆனி மாதத்திற்கான ஆனி கருடன் உற்சவம் வரும் 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.இதையொட்டி அன்று மாலை 5:30 மணிக்கு, பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து, கருட வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாடவீதி புறப்பாடு முடிந்து, இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவில் வாகன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு, பெரியாழ்வார் சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.