உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பனப்பாக்கம் சிப்காட் செல்லும் சாலையில் ரூ.26 கோடியில் வளர்ச்சி பணி துவக்கம்

பனப்பாக்கம் சிப்காட் செல்லும் சாலையில் ரூ.26 கோடியில் வளர்ச்சி பணி துவக்கம்

நெமிலி, : நெமிலி காவல் எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம், நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய பகுதிகளில் இருக்கும், 1,213 ஏக்கர் பரப்பளவில், புதிய சிப்காட் அமைய இருக்கிறது.இந்த சிப்காட் பூங்காவிற்கு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் 800 மீட்டர் துாரம் அணுகு சாலை ஆகியவை அமைப்பதற்கு, 26.50 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த அணுகு சாலை போடும் பணிகளை, நேற்று, ராணிப்பேட்டை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செல்வகுமார் ஆய்வு செய்தார். பணிகள் விபரம் குறித்து கேட்டறிந்தார்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:பனப்பாக்கம் தொழில் பூங்காவிற்கு செல்வதற்கு சவுகரியமாக, 800 மீட்டர் துாரத்திற்கு, அணுகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு, 26.50 கோடி ரூபாய் செலவில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 60 மீட்டர் நீளத்திற்கு, உயர் மட்ட பாலமும் மற்றும் சிறு பாலமும் கட்டப்பட உள்ளது.இந்த பணிகளை, வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை