உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடியில் நல உதவி

191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடியில் நல உதவி

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர்அன்பரசன் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த 306 பேர், பட்டா கேட்டும், வேலைவாய்ப்பு,ஆக்கிரமிப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.மனுக்களை பெற்ற அமைச்சர் அன்பரசன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியிடையே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், 191 பயனாளிகளுக்கு, 4.12 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.மனு பெறும் நிகழ்ச்சி முடிந்த நிலையில், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு சம்பந்தமாக, அனைத்து துறை ஆய்வு கூட்டமும் நடந்தது. இதில், மழை பாதிப்பு இடங்கள், மண்டல அளவிலான அதிகாரிகள் நியமனம், தடுப்பு நடவடிக்கைகள், உபகரணங்கள் போன்றவை பற்றி பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள்கூறினர்.இதையடுத்து, தேனம்பாக்கம் பகுதியில் நுகர்ப்பொருள் வாணிப கழகம்சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கிவைத்தார்.

'நிறைந்தது மனம்' திட்டம் துவக்கம்

தமிழக அரசின் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ், பயனாளியின் மொபைல் எண்ணுக்கு அதிகாரிகள் அழைத்து, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பயனடைந்த விபரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, 'நிறைந்தது மனம்' என்ற திட்டத்தின் கீழ், பயனாளியிடம் நேரடியாக நலம் விசாரிப்பது தொடங்கியுள்ளது.அந்த வகையில், உத்திரமேரூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சோபியா என்ற பயனா ளிக்கு,இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.அவரிடம் 'நிறைந்தது மனம்' திட்டத்தின்கீழ், பயனடைந்த விபரத்தை அமைச்சர் அன்பரசன் கேட்டார். அதற்கு, 'ஸ்கூட்டர் வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், சுயதொழில் மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்' என, அவர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை