மாடு மீது மோதி கொத்தனார் பலி
பொன்னேரி : பொன்னேரியைச் சேர்ந்தவர் சங்கர், 46; கொத்தனார். நேற்று முன்தினம் பழவேற்காடில் பணி முடித்து விட்டு, இரவு பைக்கில் பொன்னேரி- பழவேற்காடு சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.பழவேற்காடு அருகே செல்லும்போது, மாடுகள் கூட்டமாக குறுக்கே சென்றன. அப்போது சங்கர், மாடு ஒன்றின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.