உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறை

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருவீதிபள்ளம், எம்.ஜி.ஆர்., நகரில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்காக, தாலுகா போலீஸ் நிலையம் அருகில், சமுதாய கழிப்படம் கட்டப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்து இரு மாதங்களுக்கு மேலாகியும் கழிப்பறை திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால், பயன்பாட்டிற்கு வராமலேயே கழிப்பறை வீணாகும் நிலை உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருவீதிபள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் திறக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ