உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திய காரணத்தால், தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, எதிர்கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே, மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமையில் நேற்று அ.தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கைகளில் மண்ணெண்ணெய் விளக்குகள் ஏந்தியபடி, தி.மு.க., அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்ட செயலர் சோமசுந்தரம் ஆர்ப்பாட்டத்தின்போது பேசினார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.இதில், அமைப்பு செயலர்கள் கணேசன், மைதிலி, முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், நிர்வாகிகள் வள்ளிநாயகம், சம்பத், பழனி, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ