உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

ஓட்டு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டு எண்ணும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய ஆலோசனை கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர் கலைவாணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ஓட்டு எண்ணும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி நேற்று நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார்.காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணிக்கு மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ண துவங்கப்படும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்