மேலும் செய்திகள்
வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்
4 hour(s) ago
உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்
4 hour(s) ago
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் வங்கி செயல்படுகிறது.இதற்காக சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவில் பின்புறம் 15 லட்சம் ரூபாய் செலவில், 2015- - 16ல், தானிய சேமிப்புக் கிடங்கு கட்டடம் கட்டப்பட்டது.பணி முழுமையாக நிறைவு பெற்று திறப்பு விழா கண்ட இக்கட்டடம், அதன்பின் இதுவரை பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது. இதனால், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் கூறி வருகின்றனர்.எனவே, சீட்டணஞ்சேரியில் கட்டி உள்ள தானிய சேமிப்புக் கிடங்கை விவசாயிகள் பயன்பெறும் வகையில் உபயோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சீட்டணஞ்சேரி வேளாண் அலுவலர் ஒருவர் கூறியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், வேர்க்கடலை, கேழ்வரகு போன்ற தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் பொருட்டு இக்கட்டடம் கட்டப்பட்டது. எனினும், விவசாயிகள் அதை சரிவர பயன்படுத்தாததால் உபயோகமற்று உள்ளது.வேளாண் சம்பந்தமான உரம், மருந்து போன்றவை இருப்பு வைக்க உயர் அதிகாரிகளிடத்தில், அனுமதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago