உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏர்போர்ட் பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

ஏர்போர்ட் பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் நிர்மலா, 59; சென்னை விமான நிலையத்தில் 'டெலிகாம்' பிரிவு கண்காணிப்பாளர்.நேற்று முன்தினம் இரவு, விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் முதல் தளத்தில், பணியில் ஈடுபட்டு, அவரது அறையில் இருந்தார்.காலை 6:30 மணி வரை, அறையை விட்டு நிர்மலா வெளியில் வரவில்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், விமான நிலைய போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போது நிர்மலா, துாக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.நிர்மலாவின் தம்பி, சமீபத்தில் இறந்துள்ளார். இதனால் அவர், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. தவிர, பணி ஓய்வு பெறுவதற்கு ஐந்து மாதங்களே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ