மேலும் செய்திகள்
ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1.41 கோடி ஒதுக்கீடு
31-Jul-2024
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரு பேரூராட்சிகளுக்கும், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.வாலாஜாபாத் பேரூராட்சியில், 1, 2, 5, 9, 11 ஆகிய வார்டுகளில், மழைநீர் கால்வாய் கட்டுவது, சிமென்ட் சாலை சீரமைப்பது, சிறுபாலம் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, 1.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல, உத்திரமேரூர் பேரூராட்சியில், 2, 3, 17 ஆகிய வார்டுகளில், சாலை அமைப்பது, மழைநீர் கால்வாய் கட்டுவது போன்ற பணிகளுக்கு, 65 லட்சம் ரூபாய் பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.டெண்டர் பணிகள் இறுதி செய்த பின், இப்பணிகள் துவங்க உள்ளன. இரு பேரூராட்சிகளிலும், 1.95 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கஉள்ளன.
31-Jul-2024