உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெரு நாய்கள் தொல்லை ஓரிக்கையில் அதிகரிப்பு

தெரு நாய்கள் தொல்லை ஓரிக்கையில் அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை டெம்பிள் சிட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அண்ணாமலை நகர், எம்.பி.டி., நகர், நடேசன் நகர், சுதர்சன் நகர் உள்ளிட்ட பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இப்பகுதிக்கு புதிதாக சைக்கிள் மற்றும் டூ - வீலரில் வருவோரை குரைத்தபடியே தெரு நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, டெம்பிள் சிட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை